Saturday, July 25, 2009

வேலை இல்லாதவனின் வெட்டி வார்த்தைகள்




இளைஞர்களை நாத்திகவாதியாக்க எளிய வழி: கோயில்களில் கைப்பேசியை தடை செய்வது!

பதில் : இருக்கு ஆனா இல்ல. இல்ல ஆனா இருக்கு.
கேள்வி : ஆன்மீகம் என்றால் என்ன?



எனது மூளையை சிறுமையாக படைத்தவன் கடவுளா?


ஒத்திப்போடுதல் தீமை! இதை போன வருடமே சொல்ல நினைத்தேன் :)



அடுக்கு மாடி கல்லறையில் ஏறி ஒரு பூ வைத்து அஞ்சலி செலுத்தினான், தன் தகப்பனாருக்கு!
பெயர் : பொற்செழியன் தோற்றம் : கிபி 2415 மறைவு : கிபி 2500



"கண்ணா இது தான் பேனா"
"அம்மா பேனா எதுக்கு?"
"இத வெச்சு எழுதலாம், கையெழுத்து போடலாம்"
"கையெழுத்தா அப்படினா?"
இடம் : பேனா ம்யூஸீயம் , கிபி 2600



அகழி அமைகிறார்கள். எதிரியிடம் இருந்து காக்க அல்ல. யானையிடம் இருந்து விவசாய நிலத்தை காக்க...


கோடி எண்ணங்கள் துணை இருந்தால் அது தனிமை!

3 comments:

Unknown said...

nice ones

Sowmya S said...

Padathukku kavidhaya? Illa
Kavidhaikku padama?

Unknown said...

mix of both Sowmya :)