Friday, November 27, 2009

கவலைகள்...




மீசை வைக்கலாமா வேண்டாமா?
இந்த வருடம் மழை பொழியுமா பொழியாதா?

இட்லியா தோசையா?
காலையா மதிய உணவா?

நிலம் வாங்கலாமா வீடு வாங்கலாமா?
வங்கிக்கடன் கிட்டுமா கிட்டாதா?

வேலை மாற்றலாமா?
நிலம் விற்று நகரம் செல்லலாமா?

வெளி நாட்டில் படிக்க வைக்கலாமா?
படிக்க வைக்கலாமா?

அமெரிக்காவா ஆஸ்திரேலியாவா?
வாழ்வா சாவா?

இதில் 1, 3, 5, 7.. வரிகள் எனது கவலைகள்.. 2, 4, 6, 8.. வரிகள் எனக்கு உணவு அளிக்கும் விவசாயியின் கவலைகள் (கனவுகள்)..