Thursday, February 12, 2009













எனது
எண்ணங்கள் இங்கு உங்களுக்காக !!



வறுமை - பிள்ளையார் கோவில் தேங்காய் பொறுக்கித் தின்றான் நாத்திகன்

சூரியனே நீயும் இனவாதி தான்! பின்னே, நீ அதிகம் தாக்குவது கறுப்பர்களை தானே, ஆப்ரிக்காவில்!

அத்துனை அழகு என் அம்மா போட்ட கோலம். உண்மையில் அவள் ஒரு கணித மேதை தான்.

இந்தியாவில் எங்கோ ஒரு சாலையில்: வண்டி ஓட்டுபவன் கையிலோ முழு நீள கையுறை. குப்பை அள்ளுபவனோ வெறுங்கையுடன்!

கேள்வி : "லஞ்சம் வாங்கும் அரசியல்வாதி ஏன் மாட்டுவதில்லை ?" பதில் கேள்வி : " வலை பின்னும் சிலந்தி மட்டும் ஏன் வலையில் மாட்டுவதில்லை ?"

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசியவர் பட்டுப்புடவை அணிந்திருந்தார் :-).

டிவியில் பாடும் இளைஞனோ கோடிகளின் பிடியில். வயலில் பாடும் உழவனோ வறட்சியின் மடியில்!

"அன்பே சிவம்" என்றபடி ஆட்டுக்கால் சூப் குடித்தார் அந்த பெரிய மனிதர்.

பரிணாம வளர்ச்சியால் அண்டம் முழுவதும் பரவியதால் தான் உன் பெயர் அண்டங்காக்கையோ!

ராமுவை கொன்ற சோமு சுதந்திரமாக சுற்றித் திரிந்தான். கோபுவை அடித்த பாபுவுக்கோ சிறை தண்டனை. பின் குறிப்பு : ராமு - சோமு வளர்த்த ஆடு. கோபு - பாபுவின் சகோதரன்.

காதல், அது இனவிருத்தியின் முதல் படி!