Sunday, June 19, 2011

நேர்க்காணல் அனுபவங்கள்

சில வாரங்களாக வேலை தேடும் படலத்தில் இருக்கிறேன்.. மென்பொருள் பொறியாளர் வேலைக்கு தான்.. வேறு எதற்கு???.. இது வரை ஏமாற்றமே.. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று எண்ணிய பொழுது தோன்றிய கற்பனை இதோ...



பைனரி டிரீயின் (Binary Tree) மேல் ஏறினேன்
போதாது என்றார்கள்
வேர் (root) வரை சென்றேன்
வெட்டி விட்டார்கள்

லிங்க் லிஸ்டை (Link list) சுற்ற சொன்னார்கள்
தலை (head) முதல் வால் (tail) வரை
கிறு கிறுக்க சுற்றினேன்
மாத்திரை குடுத்து அனுப்பிவிட்டார்கள்

ஜாவா (java) கோடை (code) அலங்கரிக்க (decorator pattern) சொன்னார்கள்
பாண்ட்டை (font) மாற்றி அழகாக்கினேன்
டிசய்ன் பாட்டர்ன் (Design pattern) தெரியாதா என்று
தலையில் அடித்து தள்ளி விட்டார்கள்

ட்ரை (Trie) பண்ண சொன்னார்கள்
கேள்வியை கேளுங்கள் ட்ரை (try) பண்ணுகிறேன் என்றேன்
காதைத் திறுகி
கதவை மூடி விட்டார்கள்

உலகம் சுற்ற குறுக்கு வழி கேட்டார்கள் (Travelling Salesman Problem)
நான் அவர்களை சுற்றி
நீங்கள் தான் உலகம் என்றேன்
மாம்பழம் கூட கொடுக்காமல் துரத்தி விட்டார்கள்

என்ன உலகமடா இது??