Saturday, May 30, 2009

மின்சாரம்....


மின்சாரம் இல்லாமலேயே எரிந்தது..
வயிறு.. மின் கட்டணத்தை பார்த்து...

உயரம் : 5' 12". எடை : 73 ----> உயரம் தெரியவில்லை. எடை : 500 கிராம்..
உபயம் : மின்சார சுடுகாடு!!!

ஆளும் கட்சி : இது எதிர் கட்சியினரின் சதி...
செய்தி : மின் வெட்டால் வாக்குப்பதிவு பாதிப்பு!!!

பருவ மழை விளாசல்!!...
விவசாயிகள் பெரு மகிழ்ச்சி ...
அறுந்த கம்பியால் மின்சாரம் (Electrocution) தாக்கி ஐவர் பலி....

அலெசான்ட்ரோ வோல்டா (Alessandro Volta) வை விட மகிழ்ச்சி அடைந்தார் அவர்...
தன் மகன் செய்த வோல்டைக் செல்லை (Voltaic Cell) பார்த்து!!!

விண்வெளியில் தெரிகிறதாம் லாஸ் வேகாசின் நீயான் விளக்குகள்...
இங்கே இன்னும் பல கிராமங்களில் "மின்சாரம் கிலோ எவ்வளவு?" நிலை தான்!!

எண்ணில் அடங்கா எண்ணற்ற தேர்தல் பிரச்சாரங்கள்.. ஒளி மயமான மேடைகள், ஸீரியல் விளக்குகள், ஒளி பெருக்கிகள், கட்டௌட்டுகள்...
மின்சார பற்றாக்குறையால் உற்பத்தி கடும் பாதிப்பு.....





No comments: