Tuesday, April 14, 2009

சிந்தனை துளிகள்....

பூவில் உள்ள தேனை உறியும் வண்டு அதன் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. பூவை பறித்து தலையில் சூடுவதால் அதற்கு நாம் என்ன உதவி செய்கிறோம்???...

வாழை இலையை disposable plate ஆகவும், பனை ஓலையை disposable cup ஆகவும் உபயோகித்து வந்த நமக்கு எதற்கு plastic. சற்று சிந்தித்து செயல்படுவோம்!!

ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள நீரில் பாக்டீரியா பெருக முடியாது.
உதாரணம் : கங்கை அன்று!!
பிணங்கள், குப்பைகள் நிறைந்த நீரில் பாக்டீரியா தாண்டவம் ஆடும்.
உதாரணம்; கங்கை இன்று!!

பையன் கலெக்டர் ஆவான், வெளிநாடு செல்வான், போன ஜென்மத்தில் இவனுக்கு இந்த தோஷம் என்றெல்லாம் புட்டு புட்டு வைக்கும் ஜோதிடம், நிலநடுக்கம், சுனாமி , எரிமலை இதெல்லாம் எப்போது வரும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்..

வீட்டில் சிலந்தி, கரப்பான் பூச்சி, பல்லி, எறும்பு ஆகியவற்றை வளர்த்தால், வீடு சுத்தம் இல்லை என்கிறது சமுதாயம்...

விளம்பரம் (அன்று) : வீட்டு வேலை செய்ய வேலைக்காரி உடனடியாக தேவை..
விளம்பரம் (இன்று) : அமெரிக்க மாப்பிளை.. அழகான மணப்பெண் உடனடியாக தேவை..





1 comment:

Unknown said...

Good thoughts da! Keep it going!